ஒரு பல்லில் சொத்தை வந்து வேர் சிகிச்சை செய்தால் அந்த பல் இயற்கை பல் போல பலம் பெறுவதற்கு அதன் மேல் கேப் போட வேண்டும். அதே போல் பல் இல்லாத இடத்தில் டென்டல் இம்பிளான்ட் என்னும் பல் பதியங்கள் வைத்தாலும் அதன் மேல் கேப் பொறுத்த வேண்டும். இன்றைய நவீன முறையில் கம்ப்யூட்டர் மூலம் கேப் செய்வதற்கான தொழில்நுட்பம் உள்ளது. இந்த முறையில் பற்களின் அளவை கம்ப்யூட்டரில் பதிவு செய்தால் அது நம் இயற்கை பற்கள் போன்ற செராமிக் பற்களை துல்லியமாக வடிவமைத்துக் கொடுக்கும். இவை மிக லேசாக அதே சமயம் மிக பலமானதாக இருப்பதால் இயற்கை பற்கள் போல இவற்றை கொண்டு அனைத்து உணவுகளையும் சாப்பிடலாம். இந்த தொழில்நுட்பத்தின் உதவியால் நிரந்தர பற்களை குறிகிய காலத்தில் பொறுத்திவிடலாம். இதற்கு செலவும் கம்மி என்பது இந்த சிகிச்சையின் மற்றுமொரு சிறப்பு.